(ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா − 5)

ஆண்டாள், திருப்பாவையில் “கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்” என்று நந்த மகராஜாவை சித்தரிக்கிறாள். அதாவது, அவர் மனதிற்கு, ஊர்கின்ற எறும்புகூட, அரக்கராக இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறதாம். அதனால் எந்நேரமும் கூரிய வாளும் கையுமாய், கண்ணனைக் காப்பதற்காக, சுற்றிக் கொண்டிருக்கிறாராம். அப்பேர்ப்பட்டவர் இங்கே சாந்த ஸ்வரூபியாகவே இருக்கிறார்.. ஒருவேளை, கோவிந்தனின் பிறப்பிற்கு பின்னர், தன்னை சீரிய சிங்கத்தின் தகப்பன் என்ற நிலைக்கு ஏற்றாற் போல் மாற்றிக் கொண்டாரோ, என்னவோ…அவரிடமும் கோரிக்கை வைக்கப்படுகிறது. தங்களுக்குக் கிடைத்த புத்திர ரத்தினம் போன்றே, அடியோங்களுக்கும் ஒரு புத்திரன் கிடைக்க, நீரே அனுக்ரஹிக்க வேணும் என்பதாய்..

அடுத்த சந்நிதி தான் நம் கோகுல க்ருஷ்ணன் சந்நிதி.. அந்த சன்னிதியின் பூஜாரி, முதலில் நம்மை “ஜெய கோஷம்” போடச் சொல்கிறார்..
கோகுல நந்தன் கீ….ஜெய்
கோகுல லால் கீ..ஜெய்..
கோகுல மன்மோஹன் கீ ஜெய்..
இப்படி, அந்த ஜெய கோஷம் முடிந்ததும், கரகோஷம் என்கின்ற கைத்தட்டல்.. அதுவும், அவனின் நாமங்களைச் சொல்லிய வண்ணமே. இதன் பிறகு இரண்டு கரங்களையும் விண்ணோக்கி உயர்த்திப் பிடித்தவண்ணம், “ஹா,ஹா,ஹா” என்று இருமுறை சிரிக்க வேண்டும்.. இப்படி அவன் சந்நிதியில் ஜெயகோஷமும், கரகோஷம் செய்து ஆத்மார்த்தமாக நமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினால், அடுத்து அவன், நம் க்ருஹங்களில் அதே ஸந்தோஷ நிலை நீடிக்கச் செய்வானாம்.. பிறகு, எம்பெருமானிடம் ப்ரார்த்தனை செய்யக் கற்றுத் தருகிறார்கள்:−

ஹே, கோகுல் ப்யாரி..
இன்று இங்கே அடியோங்களை நீ வரவழைத்தது, அடியோங்களின் பலம் கொண்டு அல்ல..அடியோங்களது பூர்வாச்சார்யர்கள் அனுக்ரஹமும், அதுகாரணம் கொண்டே வர்த்தமான ஆச்சாரியரின் ஆசீர்வாத பலத்தாலும், இங்கு உன் முன் நிற்கிறோம். இதுவுமன்றியே, அடியோங்களது முன்னோர்களின் அபிலாஷையும், பெற்றோர்களின் பேரருளும் தாங்கிப் பிடிப்பதால், இந்த யாத்திரை எமக்கு ஸித்தியாகி இருக்கிறது. இது நிச்சயம் அடியோங்களது தன பலமோ, மன இச்சையினாலோ ஸாத்யமாகவில்லை. இத்தனை புண்ணியங்களையும் கூட்டிக் கொடுத்து, அடியோங்களுக்கு உமது தரிசனத்தையும் உவந்தளித்த உமக்கு,
என்ன கைமாறு செய்யப் போகிறோம்?

இப்படி அவன் முன் நின்றதும், அவன் நமக்குச் சொல்கிறானாம்.. மீதி திவ்ய தேசங்களுக்கு நீ தேடித்தேடிச் சென்று எனது ஸாந்நித்யத்தை உணர வேண்டும். ஆனால், இங்கு, இந்த மண்ணில் உன் கால் பட்டாலே போதுமே..,நீ என்னை அனுபவிக்க முடியுமே.. இங்கு இருக்கும் ஒவ்வொரு இலையிலும், செடியிலும், கொடியிலும் நீ என்னை உணரலாமே..என்னை மனமகிழ்ந்து ஒவ்வொரு நொடியும் பூரணமாக அனுபவி..அதொன்றே போதும்!
அது சரி, எனக்காக நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்? எனக்கு இந்த சாதாரண வெண்ணை, போதும் போதும் என்ற அளவிற்கு இங்கு நிறைய, நிறையக் கிடைக்கிறது. என்னிடம் இல்லாதது உன் ஆன்மமாகிற வெண்ணை மட்டும் தானே.. அதை மட்டும் நீ எனக்குத் தர சம்மதித்து விட்டால், நாம் இருவருமே, இங்கு கூடியிருந்து குளிரலாமே..எத்தனையோ, கோடானு கோடி ஜனங்கள் இந்த லோகத்திலே இருக்க, நான் சில லக்ஷம் பேர்களையே, என் இச்சையினால் இங்கே வரவழைத்து, எனது தரிசனத்தைத் தருகிறேன். உன்னை நான் இங்கு அழைத்திருப்பதால், எனது க்ருபை உனக்கு உறுதியாகிறதே.. கவனித்தாயா?

இதை அவன் நம்மிடம் சொன்ன உடனேயே, கண்களிலிருந்து தாரைதாரையாக நமக்கு, வர்ஷிக்க வேண்டும்.. அவனது அன்பில் திக்குமுக்காடிப்போய் நாம் பலவீனமடைய, அவன் நம்மைத் தாங்கிப் பிடிக்க,
“பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி;
பேச மறந்து, சிலையாய் இருந்தால், அதுதான் தெய்வத்தின் சந்நிதி!”
என்பது அங்கே தர்சனத்தில், நிதர்சனமாய் அரங்கேற வேண்டும்..

அதன் பிறகு, உரிமை எடுத்துக் கொண்டு, அவனிடம் நாம் கேட்கலாமாம்− அது சரி கண்ணா, உன்னைத் தேடி அடியேனிங்கு, ஓடி வந்திருக்கிறது போல், அடியேன் க்ருஹத்திற்கும் நீ ஆசையுடன் வந்து அமர்ந்து கொள்கிறாயா?.. நீ மட்டும், அங்கு வருவதாக, ஆத்மார்த்தமாக, ஒரு வார்த்தை சொல்.. அடியேனின் க்ருஹத்தை கோகுலமாக்கி, அகத்தை, மற்றை நம் காமங்கள் ஒழித்து, உனக்கே ஆட்படுத்தி விடுகிறேன்..

இப்படி “பா”வத்தோடு அவனை அழைத்து, பாசத்தினால் அவனைக் கட்டி, பரஸ்பரம் தருவதும், பெறுவதுமாக அமைய வேண்டுமாம் நம் ப்ரார்த்தனை! செய்வோமா? வாருங்கள்… கனிவோடு குரல் தாருங்கள்…

ஆலிலை பாலா, ஆத்ம ஸ்வரூபா,
ஆவோ, ஆவோ, ஹே நந்த லாலா..
அனிஷ்ட முக்தி, இஷ்ட சுப்ராப்தி,
தே தோ, முகுந்த, மேரே ப்யாரா…

(ராதேக்ருஷ்ணா..)
கண்ணன் வளர்வான்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s