( ஶ்ரீக்ருஷ்ண யாத்ரா −11 )

இப்பொழுது நாம், எத்தனை முறை பார்த்தாலும், அலுக்கவே அலுக்காத ஓர் இடத்திற்குப் பயணப்படுவோம்..!
அந்த இடத்தை மட்டும் ஒரேயொரு முறை தரிசனம் செய்து விட்டீர்களேயானால், வெளியே வரவே மனமிருக்காது.. அவஸ்யம் நாம் இவ்விடத்தை விட்டு வெளியே போய்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணம் ஏற்படுவதை நம்மால் தவிர்க்கவும் இயலாது. அந்த சூழ்நிலையே நம்மில் கோபிகைகள் ஸகிதமான கண்ணனை, கண்முன்னே நிறுத்தி விடும்.

ஏகாந்தமான அந்த இடம் “நிதிவன்” என்றழைக்கப்படுகிறது.
இங்கே கண்ணன் பதினாயிரம் கோபிமார்களுடன் ராஸக்ரீடை செய்தானாம். எண்ணிக்கையில் அடங்கா எத்தனை சிறு மரங்கள்.. அத்தனையும் கோபியராம்.. அதனால்தானோ என்னவோ, இந்த சிறு மரங்கள், எல்லாம் கச்சிதமான அளவில் காணப்படுகின்றன போலும்! இரவு நேரத்தில் இந்த மரங்கள் கோபியராக மாறி, தனித்தனி க்ருஷ்ணருடன் ராஸக்ரீடை செய்கின்றனவாம்! இந்த சிறு மரங்களின் கிளைகளெல்லாம் ஒன்றொடு ஒன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வேளை கண்ணனொடு, பின்னிப் பிணைந்த நிலையிலேயே விடிந்துவிட்டது(!) போலும்! இனி, அடுத்த இரவு வரை, உறவில் உறைந்த நிலையோ?…

தனித்தனியாக அவனொடு சுகம் அனுபவித்தது போக, இரண்டு இடங்களில், ஒரு சிறிய அரங்கம் போன்ற பளிங்கு மேடையையும் காணமுடிகிறது. இங்கு, கண்ணன், அத்தனை கோபிமார்களையும் அழைத்துக் கொண்டு வந்து, நிலவொளியில் நாட்டியம் செய்வானாம்!

ஏங்கி, இளைத்தே விடுகிறது மனது..
என்னை மறந்தாயா, இல்லை மறுத்தாயா? என அவனிடம் தர்க்கித்து நிற்கிறது நெஞ்சம்..

விழியோரம் கண்ணீர் எட்டிப் பார்க்கும் போது, வைகுந்தனின் சமீபத்தை, ஒரு நொடி, ஒரேயொரு நொடி, உணர முடிகிறது..

சட்டென்று அந்த காட்சி..

மகுடத்தை அலங்கரிக்கும் மயில்பீலி..

உவமானம் சொல்லி அவமானப்படுத்த முடியாத, பேரெழில் வதனம்..

காதல் கொப்பளிக்கும் கண்இணைகள்..

மயக்கும், மந்தஹாஸப் புன்னகை தவழும் அதரங்கள்…

மகரகுண்டலங்கள் அணிந்த செவிகள்..

அழகை, அவனிடம் பெற, அணிவகுத்த பல விதவிதமான ஆபரணங்கள்..

எழில் மேவும் வனமாலையை ஒட்டிய அடர்த்தியான துளஸி மாலை, சேர்ந்து தவழும் மார்பு..

பரந்து விரிந்த “பார், பார்” எனும் தோள்கள்..

நீண்ட நெடிய கரங்கள்..

இடையில் இளைப்பாறும் பீதாம்பரம்..

காந்தமாய் இழுக்கும் கழலிணைக் கமலங்கள்..

இதுவெல்லாம் போதாதென்று, இரு கரங்களின் தீண்டுதலோடு அதர அமிழ்தையும் தட்டிப்பறித்த அந்த வேங்குழல்.. இப்பொழுதும், தப்பாது அவன் திருக்கரங்களில்.. இதோ, பொழிகிறானே, தேவ கானம்…

சற்று அமருங்கள்.. நாமெல்லாருமே ரசிப்போமே….

கண்ணன் இ(அ)சைப்பான்…)

(ராதேக்ருஷ்ணா..)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s