(மாரன் அம்பு மாறலாமோ?…)

இலக்கில்லாமல் எய்யாதீர்−
இளம் சிறார்மேல் தொடுக்காதீர்;
விளங்காது போகுமிவர் எதிர்காலம்;
வேதனையே காண்பாரே, இவர் எக்காலும்!

ஒரு தாரம் இருப்போரை வறுத்தாதீர்;−அவர்−
மறு தாரம் கொள்ளவே வைக்காதீர்!
பெரும்பாவம் செய்யும் அவரில்லமதிலே−
உறுத்தாதோ ஊழ்வினையாய், துயர் பரவி?

கல்லே ஆனாலும் கணவன் என்பார்; அந்த
கற்பரசிகளை நீர் கலைக்காதீர்;
கலியின் கொடுமையாய், அவர் மனம் நுழைந்து−
வலிய, அவர் வாழ்வையே வதைக்காதீர்!

வம்புகள் இல்லாத பாதையிலே−உமது
அம்புகள் செல்லட்டும், அழகாக!
அல்லல்கள் விளைக்காத இலக்குகளில்−
அன்பை நீர் விதையுங்கள், உம் அருளாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s