(அன்பென்றாலே அம்மா…)

கருவில் எனைச் சுமந்தாய்; நீ−
கஷ்டம் என்று சொன்னதில்லை;
கடைசி ஸ்வாஸம் வரை, எனை−
கருத்தினின்று, இறக்கவில்லை!

தெய்வம் உன்னுருவில், என்னை−
தாங்கியதாய் உணர்ந்தேனே;
செய்யும் கைமாறு−
ஏதுமில்லை அறிந்தேனே!

உடலும், எனதுயிரும், நீ−
உவந்தே தான் கொடுத்தாயே;
அடடா, அதற்கிணையே−
ஒன்றுமின்றி துடித்தேனே!

தாயாய் உனதன்பில்−
துளித்துளியாய் உயிர்த்தேனே;
சேயாய் உனைத் தாங்க−
சமயம் உண்டோ, அறியேனே!

மடியின் வாசமெல்லாம்−
மனதின்னுள்ளே புதைத்தேனே;
மற்றது ஒன்றிதற்கு−
மாற்று இல்லை, அழுதேனே!

என் நான் செய்தாலே,
என் கடனே தீருமம்மா?
உனை நான் ஒரு ஜன்மம்−
உதரம் வைக்க, ஆரும் அம்மா!

அன்பின் பொருள் எழுதி, எனை−
அவனியிலே விதைத்தாயே;
அம்மா, நீ போனால்−
ஆர் உன் போல்? பதைத்தேனே!

தாயே, யாசகமே−
உன்னிடம் ஒன்று கேட்பேனே;
தாங்கும் உன் கரவெதுப்பை−
என்னுள் உணர என்றும் வைப்பாயே!

போதும், அது போதும், அந்த−
பரிவினில் நான் வாழ்வேனே;
ஏதும் பயமின்றி, இறுதி வரை,
நான் உழல்வேனே!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s