(நிச்சயமாய், அட்சயமே…)

அட்சயமாய் அன்பு பேணி−
அனாதையர்க்கு உதவுவோம்;
நிச்சயமாய் தேடும் சொர்கம்−
நான் வந்தேனென தானே வரும்!

அட்சயமாய் நம் ஆதரவை−
அங்கஹீனர்க்கு ஆக்குவோம்;
நிச்சயமாய் தேடும் சொர்கம்−
நான் வந்தேனென தானே வரும்!

அட்சயமாய் அரவணைப்பை−
அரவாணியர்க்கு அளிப்போம் நாம்;
நிச்சயமாய் தேடும் சொர்கம்−
நான் வந்தேனென தானே வரும்!

அட்சயமாய் ஆத்திகநெறி−
ஆரறிவினர்க்கு ஊட்டுவோம்;
நிச்சயமாய் தேடும் சொர்கம்−
நான் வந்தேனென தானே வரும்!

அட்சயமாய் நல் எண்ண தானம்−
ஆதரத்துடன் செய்குவோம்;
நிச்சயமாய் தேடும் சொர்கம்−
நான் வந்தேனென தானே வரும்!

அட்சயமாய் இறைகுணங்களும்,
அகிலமிதில் விளைத்திட−
நிச்சயமாய் அட்சயமாய்,
நம் வாழ்வு பொலியாதோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s