(விரைவாயே வைகுந்தா…)

இவ்வுள் கிடக்க வாவா என்று
இரைஞ்சி அடியேன் இருந்தாலும்−
அவ்வுள் அமைய அவாவுமின்றி
ஆறி இருப்பதேன், அச்சுதனே?

செவ்வாய் திறந்து, யான் செய்ததைச் சொல்லி−
ஒவ்வாதெனவே உரைப்பாயா? இல்லை−
இவ்வாறினி நீ நடவாதேயென−
இயம்பி, கனிவாய் பார்ப்பாயா?

வெவ்வினை எனது பெருகக் கண்டும், நீ−
வாளாதிருத்தலும் சரிதானா?
அவ்விலங்கெல்லாம் முறித்து எறிந்து, எனை−
அணைக்காதிருப்பதும், முறைதானா?

எவ்வாறெனினும், உன்னையன்றி,
எனக்கென்றிருக்கும் உறவும் யார்?
மெய்வாய் ஆதி ஐம்புலனுருகி−
அழைக்கிறேன் உனையே, ஆறுதல் தா!

செவ்வடி வீழ்ந்தேன், சிந்தையே குளிர்வாய்,
சேரும் நாளதை சீக்கிரம் தா!
அவ்வடி ஏற்று, அடைக்கலம் அளித்தே−
அருளிட வேகம் நீயும் வா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s