(அனைத்தும் நீயே…)

அன்னை எனக்கு−
அரவிந்தன் தானே;
அத்தன் எனக்கு−
அச்சுதன் தானே!

என்னை நானும்,
உணரும் முன்னே−
எண்ணம் மேவியது,
எம்பிரானே!

உற்ற துணையாய்−
உத்தமன் வருவான்;
சுற்றம் நானென−
சிரீதரன் சொல்வான்;

பெற்ற தாயினும்,
பரியும் பரமன்−
மற்ற வழியில்,
மாற்றித்தான் விடுவனோ?

நாவும் சொல்வது−
நாரண நாமமே;
நாயேன் நயப்பது−
நலம் தரும் பாதமே!

கோவாய் அவனே!
குடைக்கீழ் நானே;
கோவிந்தன் எனையே−
காப்பான் தானே!

கரணங்கள் இவையே−
கண்ணனுக்காக்கி,
தருணங்கள் அவையே−
தூய்மையே செய்வேன்;

சரண கமலங்கள்−
சிரமதை தீண்டும்;
அரண் அமைந்ததே−
அல்லல் ஏது மீண்டும்?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s