(அன்னமே, ஆறிவிடு!….)

(அடுப்பிலும் அன்னம்..இந்த பதிவில் உள்ள பெண்ணின் பெயரும் அன்னமே…)

தளதளதளவென கொதிக்கிறது;
தண்ணீர் சேர்க்கவும், தணிகிறது;
மளமளமளவென வேகிறது;
முடிந்த பின்னாலும் சுடுகிறது!

வெம்மை எளிதில் குறைவதில்லை;
வெறும் கரம் அதனைத் தொடுவதில்லை;
உண்மையாய் அதனை விரும்புபவர்,
உபகரணத்தோடதை நெருங்குகிறார்!

ஆவி பறக்குது அருகினிலே;
ஆற மறுக்குதே எளிதினிலே!
அவித்துச் சுவைக்கிறார் யாவருமே;
அத்தோடு மறக்கிறார் அனைவருமே!

எத்தனை நிகழ்வுகள் ஆயிருக்கு;
எல்லாம் உருமாறிப் போயிருக்கு!
அத்தனையும் நினைத்திட யாருண்டு?
ஆயிரம் வேலைகள் அவர்க்கு உண்டு!

அனுபவம் தந்த பாடத்திலே−
அகப்பட்டவர்க்கே காயமுண்டு;
அடுத்தவர் உணரணும் என்பதிலே−
ஆசையில்லையெனில், நன்மை உண்டு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s