(அப்போதைக்கு, இப்போதே..)

இருளதை விலக்கியே,
இதமதை கூட்டவும்−
இறைஞ்சி நிற்போர்தம்,
இன்னல் துடைக்கவும்−

இருகரம் குவித்து,
இறைவனை வேண்டியே−
இளகிய மனத்தனாய்,
இறங்கி நீ வந்தாயே!

நின்னருள் பெருக்கெமை,
திண்ணமாய் காத்திட−
பன்னிரு கரத்தொடு−
பரிந்தொரு ஆறேற்றி,

பதினெண் கரத்தனாய்−
பாலிக்கவந்தாயோ? இது,
கதியென கழலிணை−
கண்ட, எம் பேறோ?

அருவினை எமதெல்லாம்−
உருவின்றி அழியவே,
உருகியே, நின்னை எம்−
உளம் நினைக்க வையுமே!

விதியை மாற்றுமே−
வித்தகா, நின் நாமம்!
விரஜையில் எமையது−
விளக்கவும் செய்யுமே!

வைகுந்தம் வசமாக்கி,
வாழ்ச்சியும் நல்கியே−
பைநாகத்தணையன்,
பக்கலில் வைக்குமே!

முப்போதும் தப்பாமல், இனி−
செப்ப வைப்பாய், உன் நாமமே;
இப்போதில் செய்திடவே, அது−
அப்போதைக்கென ஆயிடுமே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s