(அழைக்கிறானோ, அச்சுதன்?….)

பரமன் விடுகின்ற தூதின் ஓலை−
பறவை கொணர்கிறதோ?
சிரமம் இனியும் இல்லை, என்று−
சேதியும் சொல்கிறதோ?

இரவும் இல்லை, பகலும் இல்லை−
இனி உனக்கென்கிறதோ?
உறவும் இல்லை, பிரிவும் இல்லை−
உயிர் எனக்கென்கிறதோ?

நேற்றைய நாளின் கூற்றுகள் எல்லாம்−
நீங்கின என்கிறதோ?
நாளைய பொழுதின் விடியல் நோக்கி−
நகரவும் அழைக்கிறதோ?

இருளைக் கிழித்து, ஒளியும் காட்டி−
என்னை விளிக்கிறதோ?
கருவறை கழித்து, கலியும் அழித்து,
அருளதை விதைக்கிறதோ?

எனதும், நானும் இல்லையென்றாக்கி,
என்னைக் கரைக்கிறதோ?
மனதும் நினைவும் தன்வயப்படுத்தி−
தன்னுள் மறைக்கிறதோ?

இரண்டை அகற்றி, ஒன்றை உணர்த்தி,
இணைவதைச் சொல்கிறதோ?
இருப்பை இனிமேல் தனக்கென்றாக்கி,
இறை நீ என்கிறதோ?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s