(“ஆ”வாய் ஆவேனா?….)

“கோ”வினது காலிடையே
கோவிந்தன் கண்டதென்ன?
“ஆ”வினது அன்பையெல்லாம்−
அமுதமாக்கி உண்டதென்ன?

கட்டவிழ்ந்த கன்றைப்போல−
குதித்து ஓடி வந்ததென்ன?
இட்டப்பட்டு, இதழை வைத்து−
இன்பம் அதற்கே தந்ததென்ன?

ஆவி குளிர அதரத்தாலே−
ஆசை, காதல் சொன்னதென்ன?
தேவிமாரும் அசூயை கொள்ள−
தேடி சுகமும் அளித்ததென்ன?

எத்தனையோ உயிர்களிருக்க,
இத்தனை ப்ரியம், இதன் மேலென்ன?
அத்தனுக்கு போக்கியமாய்−
அத்தனை அது செய்ததென்ன?

தேனான தீஞ்சுவையை−
தானாக அவன், தருவதென்ன?
நானும் தானே பார்த்திருக்கேன்−
வீணாக, எனை விடுவதென்ன?

ஆரறிவை எடுத்துக்கொண்டு,
“ஆ”வாய் எனை மாற்றுவனோ?
வேறெதுவும் வேண்டேன் யான்−
அவன் உதடு உரச, எனைத் தேற்றுவனோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s