(இனியேனும் திருந்துவாயே…)

கட்டிப் போட நான் வந்தால், என்−
கைபிடித்து அழுகின்றாய்;
எட்டிப்போக நினைத்தாலோ−
ஏனிப்படி என்கின்றாய்!

தட்டில் வைத்து வெண்ணை தந்தால்−
தகராறு செய்கின்றாய்;
கொட்டிலில் இருந்த மாடெல்லாம்−
காணலையோ என்கின்றாய்!

சட்டியெல்லாம் உடைத்து நீயும்−
சிலர் வீடுபுகுந்து தின்கின்றாய்;
திட்டி அவர் போனாலும்−
துடைத்துப் போட்டுச் சிரிக்கின்றாய்!

பட்டி மேய்த்து வருவதற்கோ−
பரபரப்பாய் இருக்கின்றாய்;
சுட்டித்தனம் செய்வதற்கோர்−
சந்தர்ப்பமாய், அதை எண்ணுகின்றாய்!

கட்டிளம் கன்னியர் உளம் நோக−
கூறை திருடி, களிக்கின்றாய்;
வெட்டிப்பேச்சு பேசி அவரை−
வெறுப்பேற்றியும் மகிழ்கின்றாய்!

கொட்டி அடுக்கிப் போகின்றார்−
குறை எல்லாம் மற்றவரே;
தட்டி ஒன்றும் கேட்பதற்கே−
தாய் எனக்கும் இயலவில்லை;

எட்டெழுத்து நாமத்தானே,
இனி உன்னை மாத்த வேணும்;
கிட்ட வாடா, நாமம் இடுவேன்,
கனிந்து வேண்டி நீ, உனைத் திருத்தக் கேளேன்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s