(உதவுமோ, ஒற்றைவிரல்?…)

அண்டபகிரண்டமும்
அளந்து முடிந்த பின்,
அவுணனை அழிக்க−
அடுத்தொரு அடி கேட்டு,
நீ காட்டியது ஒரு விரல்;

அடியவர் துயர் துடைக்க−
ஆழி எய்திட, அன்று,
நீ உபயோகித்தது−
ஒரு விரல்;

மக்களொடு மாக்களையும்,
மலை சுமந்து, அந்நாள்−
பெருமழை காத்ததும்
உனது ஒரு விரல்;

மங்கை அவள் மானம் காக்க,
மலையாய் புடவை
சுரந்தளித்ததும்,
உன் ஒரு விரல்;

இதுவெல்லாம் பாடமாக,
எமக்கு உன் வழிகாட்டுதலாக
கொண்டு, யாம் உன்னையே−
அண்டும் போதில்−

“ஆம், இந்தா..” என்றொரு
ஒற்றை விரல், பற்ற நீட்டி− உய்வித்தாலாகாதோ?…
உனக்கும் அது சேராதோ?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s