(உன்னை ஒன்று கேட்பேன்..)

பந்தங்கள் என்னைத் துரத்தித்துரத்தி
பந்தே ஆடிடினும்−
சொந்தங்கள் எந்தன் பதங்கள் பிடித்து,
சேற்றில் அழுத்திடினும்−
நின் தயை இருந்தால் எந்தன் தளைகள்−
நொடியில் விலகாதோ?
முந்தைய வினையின் மூடைகள் அங்கே−
முழுதும் நலியாதோ?

ஆரவாரம் எல்லாம் ஒய்ந்தொரு−
அமைதியும் பிறவாதோ?
அசைவுகளற்று அலையும் மனதும்−
ஆறுதல் காணாதோ?
பாரமெல்லாம் தாமே இறங்க−
படுதுயர் அகலாதோ?
பரிவின் தீண்டலை புரிந்திடும் வேளையும்−
பரிசென வாராதோ?

முந்தி உனதால், அழுத கண்ணீர்−
முழுதும் துடைப்பாயோ?
என் திருமகளே, இனி துயரில்லை−
என்றே அணைப்பாயோ?
மந்தியாய் அலையும் வாழ்விது மாற்றி−
மணக்கவே வைப்பாயோ?
இந்திரியம் எல்லாம் இயக்கம் ஒழிக்க−
ஏதும் செய்வாயோ?

மனத்தின் வலிகள் மெல்லவே மறைய−
மடி நீ தாராயோ?
மற்றவை யாவும் மறந்தே போய்விட−
மெதுவாய் வருடாயோ?
கணத்தின் துளியிலும் நீங்காதென்னை−
கண்ணுள் ஒளிப்பாயோ?
கனிந்தே இந்த கசடாம் ஆன்மம்−
உன்னுள் ஏற்பாயோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s