(உறங்குவேனே, உன் அணைப்பில்!..)

உற்ற துணை உனையெனவே−
உளமெழுதினேன்;
பற்றும் வைத்து, பகலிரவாய்−
உனை நாடினேன்!

பெற்றவளாய் நீ இருக்க−
ஏன் மயக்கமோ?
சுற்றும் வினைத் திரளடங்கும்;
ஏன் கலக்கமோ?

விழி பார்த்தால் போதும், எந்தன்−
வினை தீருமே;
பழி பாவம் தொலைந்தெனக்கு−
பலன் கூடுமே!

அழியாத செல்வம் உந்தன்−
அணைப்பல்லவா?
அது எனக்கு கிடைத்தாலே−
அருளல்லவா?

அகலாதே, அடியேன் உன்−
மடி நாடினேன்;
விலகாதே, வெவ்வினையேன்−
நிழல் தேடினேன்;

பரிந்தாலே போதும் நீ−
“ப”வம் தாண்டுவேன்;
பரந்தாமன் சந்நிதியில்−
நிதம் வாழுவேன்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s