(எந்நாளோ, அந்நாளே?…)

அன்னையும் பிதாவும் கருணையே காட்டி−
என்னையும் கொஞ்சம், பாலிக்க வேணும்;
இன்னமும், இன்னமும் சுழலிதில் நானே!
எண்ணமே இல்லையோ, உய்விக்கத்தானே?

தொடர் அலையாக துரத்துதே பிறவி−
அடர் இருளாக, அரட்டுதே கறுவி!
இடர் இதனின்று நீர் தான் உருவி−
சுடரொளி கூட்டணும், நான் உம் குழவி!

பெற்றவர்க்குண்டே கடமைகள் சிலவும்!
பற்றுதலோடதை செய்யவும் முடியும்!
மற்றவர் முன்னே உம் சிரம் குனியும்−
உற்றது செய்வீர், என் மனம் தணியும்!

எத்தனை நாளாய் கேட்கிறேன் கதறி?
எப்படிச் செல்வீர், என்னை நீர் உதறி?
என் சேய் என்றே, வருவீரோ பதறி?
என் வினை பொடியுமே, உடனிங்கு சிதறி!

அழலிடை வெம்பின, அடியேன் செந்நாள்;
தழலிடை தகிக்குதே, மீதமாம் வாணாள்;
கழலிணைக் காட்டி நீர், கனிகின்ற பொன்னாள்−
நிழலென ஈவதும், எந்நாள், எந்நாள்?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s