(எந்நாளோ, எம்பிரானே?..)

எனக்கு நானே எதிரியாய்−
ஏனோ மறந்தேன் உன்னை நான்;
உனக்கு அதுவும் தெரிந்ததன்றோ? என்−
உயிரின் மதம் நீ அறிந்ததன்றோ?

எத்திறம், எத்திறம் என வியந்துன்னை,
எத்தனையோ பேர் தினம் போற்றுகிறார்;
அத்திறம் அதுவும் உண்டென்றால்,
அடியேன் துயரும் ஆற்றுவதெந்நாள்?

தம்பம் பிளந்து வெளிவந்து,
தமியன் உயிர் நீ காத்தனையே! வெறும்
கம்பம் போலொரு கனிவுமின்றி,
கடையனுமுள்ளேன், நீ களைவதெந்நாள்?

நெஞ்சைப் பிளந்தந்த அவுணனது,
செங்குருதி ஒழுகு மாலை கொண்டாய்;
வஞ்சனையேன் என் அகம் பிளந்து, நீ
உட்புகுந்தே, எனை உய்விப்பதெந்நாள்?

ஏதங்களாலே நிறைந்த என்னை,
எம்பிரான் அடிக்கீழ் ஏற்பதெந்நாள்?
பாதக்கமலங்கள் பரிந்தளித்து, எனை
பாலிக்கும் பொந்நாள், அதுவும் எந்நாள்?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s