(என்னடா, பொல்லாத வாழ்க்கை!..)

என்னைச் சுற்றி எத்தனைப் பேர்! இதில்,
எனக்கு உற்றவர், எத்தனைப் பேர்!
இன்று என்னை ஆதரிப்பார்−
என்றோ ஒரு நாள் ஒதுக்கிடுவார்!

எதிர்மறை நினைவுகள் காரணமா? அவர்
எண்ணத்தின் பிசகுகள் காரணமா?
எந்தன் வெற்றிகள் காரணமா? நான்
எழும்பி நின்றதே ஒரு காரணமா?

நேற்றும், நாளையும் ஒன்றானால்,
நண்பர், நம்மவர் என்கின்றார்;
சற்றே, என் நிலை உயர்ந்து விட்டால், நான்
சறுக்கிட அவரும் வேண்டுகிறார்!

அன்று போலவே, அகமகிழ்ந்து,
அவரைப் பேணிட எண்ணுகிறேன்;
இன்றைய என் நிலை தாங்காமல், அவர்
எதிரியாய் நோக்கவும், ஏமாறுகிறேன்!

அறுவடை எதுதான் செய்தால் என்?
அன்பை விதையாய் வை என்றார்;
விதைத்த அன்பின் பயனாக, நான்−
விலையாய் கொடுத்ததை யாரறிவார்?

முன்னால் என் புகழ் பேசிடுவார்;
பின்னால் எனை இகழ்ந்தாறிடுவார்!
என்னே! உலகியல் சொல்லிடுவிர்! இதில்
என் குற்றம் ஏதென உரைத்திடுவீர்!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s