(என்ன நம்பலயே…)

(இந்தப் பதிவு மேலோட்டமாக பார்க்கும் போது, யசோதையுடன் தர்க்கிக்கும் கண்ணனாகவே தெரியும்.. ஆனால் சற்று ஆழ்ந்து படித்தால், யசோதையை ஜீவாத்மாகவும், வெண்ணையை, கண்ணன் விரும்பும் ஆன்மமாகவும் காணலாம்.)

வெண்ணைப் பானய, நான் பாக்கவே இல்ல−
என்னப் போயா கேக்கற கேள்வி?
சொன்னாக்கூட நீ ஒத்துக்க மாட்ட−
என்னத்த செய்வேன், ஒன் நம்பிக்க கூட்ட?

நீயா கொடுக்கற வெண்ணைய விட்டு−
நானா எடுத்ததா சரித்திரமில்ல..
வாய வேணா திறந்து நீ பாரு;
வைகுந்தன் காமிப்பான் தானும் யாருனு!

நெல்லிக்கா அளவில, உருட்டி, உருட்டி−
நாளைக்கு ஒருதரம் கொடுப்பயே நீ!
என்னிக்கு அதிகமா கேட்டிருக்கேன்?
யார் கிட்ட கொறையும் நா சொல்லிருக்கேன்?

யாரோ சொல்ற பேச்செல்லாம் கேட்டு−
என்ன கட்டிப் போட்டுட்டயே;
ஊரா பெரிசு, ஒன் பிள்ளய விட?
ஒன் செயலே காரணம், நான் கண்ணீர் விட!

மத்தவா சொன்னாக்க, மந்திரமா இருக்கு;
மயங்கியே அவர் சொல்லும் கேக்கறயே;
மாதவன் வார்த்தயில ஏன் நம்பிக்க இல்ல?−
மாதாவே, இதுவா ஒன் அன்பின் எல்ல?

என்ன புரியாம தப்பெல்லாம் செய்யற!−
என்னிக்குத்தான் இத தெரிஞ்சுப்ப நீ?
ஒன்ன நெனச்சா தான் கண்ணீருமே−நீ
ஒப்புக்கும் நாள் வந்தா, நா மனம் ஆறுவேன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s