(என் கவல எனக்கு…)

அடுத்து யார் இல்லம் நுழைவதென்று−
ஐயா, எனக்கொன்னும் புரியலயே;
எடுத்து வெண்ணையை உண்பதற்கே−
எனக்கோ, ஆசை கொறயலயே!

பக்கத்துவீட்டு பாலாவோ−
பானையை பதுக்கி வெச்சிருக்கா;
பத்துப் பூட்டு போட்டு அதன்−
சாவியை தலைப்பில முடிஞ்சிருக்கா!

எதிர் வீட்டு இளவரசி−
எரவாணத்தில், மறச்சு ஒளிச்சிருக்கா;
ஏனோ அதுக்குக் காவலென்று−
அதுக்குக் கீழயே படுத்திருக்கா!

கோடியாத்து கோபாலி−
குழியில பானைய எறக்கிருக்கா;
குழிக்கு காவலா கணவனையே,
கழியோட ஒக்காரச் சொல்லிருக்கா!

நாலாம் ஆத்து நந்தாவோ−
வேலியே போட்டு மூடிருக்கா;
நானும் அங்க போனாக்க−
தோல உறிச்சே போட்டுடுவா!

இப்படியெல்லாம் செஞ்சாக்க−நான்
எப்படி இங்க இருக்கறதாம்?
முப்படி வெண்ணை தினம் வேணும்−இனி
எப்படி காலம் தள்ளறதாம்?

பச்சை பிள்ளை நானென்றா,
பலரும் என்னை ஏய்க்கின்றார்!
இச்சைப்படி நான் செய்யணுமே−இப்ப,
யார் என் உதவிக்கு வருகின்றார்?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s