(என் வாழ்வின் சூரியனே….)

சுடுகின்ற சூரியன்தான் நீ!
ஆயின்,
விடிந்திடுமோ பொழுதும்−
நீயின்றி இங்கே?

முரட்டுத்தோல் மூடிய
பலாப்பழமே நீ!
ஆயின்−
முக்காடிட்டு அதில் ஒளிந்துள்ள−
தீஞ்சுவை சுளை, உன் மனதல்லவா?

முள்ளிடையே ரோஜாவாய்
உன் பிறவி!
ஆயின்−
உள்ளபடியே, உன் வாசம் யாரறிவார்?

நான் தகப்பனாய்
உருவெடுத்து,
நாலாறு வருடம் கடந்த பின்னரே−
உணரப்பட்ட உன்னதம் நீ!

பாலுக்குள்ளே வெண்ணை போல,
சூலுக்குள்ளே சிசுவைப் போல,
உனது−
அன்பையெல்லாம் அடைகாத்து,
அன்னியப்பட்டு நிற்கும்−
ஒரு அவலமப்பா நீ!

பெண்ணைப் பெருமைபடுத்தும்−
இந்த மண்ணிலே,
ஓரம் கட்டப்பட்ட ஓடமாய் நீ!

மெழுகாக உன்னைச் சித்தரிப்பதில்
ஒரு நியாயமுமில்லை;
கொஞ்சமும் உருகாத உறுதியுடன்−
உளியின் வடுக்களை எல்லாம்,
உன் மீது சுமக்கின்ற−
உயிருள்ள உரலும் நீயல்லவா?.

அப்பா……
கொஞ்சம் என் அருகே வாயேன்..என்−
நெஞ்சில் நான் உன் மீது−
வைத்துள்ள ப்ரியத்தை,
நீ என்னைவிட்டுப் பிரியும் முன்−
ஒரு முறையேனும்−
சொல்லிக் கொள்கிறேன்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s