(ஐயே, மெத்தக் கடினம்….)

நோயும், நலிவும் இவ்வுலகில்−
நேர்ந்து, யாரும் பெறுவதில்லை;
ஆயும், அப்பனும் அதுவே போல்−
அழுது கேட்டு அடைவதில்லை!

விதிவசம் என்று தெரிந்திருந்தும்−
விருப்பத்தை மனமேன் தொலைப்பதில்லை?
பதியவன் பாதம் பற்றுவதில்−
பக்குவம் ஏன் இன்னும் நிலைக்கவில்லை?

செம்மை படுத்து உன் எண்ணங்களை, என்றே−
சான்றோர் சொல்லுகிறார்;
உண்மையில், அது வசப்படுவதற்கே−
உள்ளம் உதவிட வருவதில்லை!

என்னால் இயலும் எனும் எண்ணம்−
எப்பொழுதோ தான் வருகிறது;
எல்லாம் மாறிப் போகையிலே−
அலுப்பும், சலிப்புமே நிற்கிறது!

படிக்கும் போது புரிவதெல்லாம்−
பழகும் போது, எங்கு ஒளிகிறது?
பாதைகள் நிறுவிய பின்னாலும்−
“பா”தைகள் ஏன் இங்கு ஒளிர்கிறது???..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s