(கடப்போம் யாவையும்…)

கடந்து வந்த பிறவியதுவோ பல கோடியே;
கடக்க இன்னும் இருப்பதுவும், பல கோடியே!
கடப்பதற்கு தூண்டும் அந்த அருஞ் சொல்லுமே−
“கட” என்பதே, என்றார் பெரியோருமே!

“கட உள்” எனச் சொன்னார், மறை பொருளிலே;
“கடவுள்” எனப் படைத்தேனே, அறியாமலே!
கடக்காமல் பலதும் நான் சேர்த்திருந்தேனே;
கடனாக அது ஏற, பார்த்திருந்தேனே!

கடந்தோரே கரை காண்பார், இது நியதியே;
கடக்கும் அவா இல்லையெனில், பெரும் அவதியே;
“கட” என்பதே, ஒரு திருமந்திரம்!
கடந்திடுவோம், அடைந்திடுவோம் நம் சுதந்திரம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s