(கூடும் நாள்தான் குறுகிடாதோ?..)

ஆடும் பாதம் உனதைக் கண்டேன்;
வாடும் நெஞ்சில் வளமாய் கொண்டேன்;
தேடும் சுகங்கள் உன்னில் லயிக்குதே;
கூடும் நாள்தான் குறுகிடாதோ?

ஏடும் எழுத்தும் படித்தவன் நானிலை;
பாடும் பத்தரின் துணையும் எனக்கிலை;
நாடு உனதை நயவாத காலையும்−
கூடும் நாள்தான் குறுகிடாதோ?

கூடு இதனில் துடிக்குதென் ஆவியே;
நாடு நாதனின் தாளிணை என்னுதே;
பீடுடையுன் பதமெனை ஈர்க்குதே−
கூடும் நாள்தான் குறுகிடாதோ?

வீடு தருகின்ற வேங்கடவாணனே!
சூடுவாயுன் செவ்வடி சிரத்திலே;
கேடு ஏதடா, நீ கனிந்தாலுமே−
கூடும் நாள்தான் குறுகிடாதோ?

காடு என்னை அழைத்திடும் முன்−பற்றுக்
கோடு நீயென நானும் உணர்ந்தேனே;
ஆடும் அப்பதம், அகம் நீ இருத்துவாய்−
கூடும் நாள்தான் குறுகிடாதோ?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s