(கூடும் நாள் குறுகாதோ?…)

மலை உச்சியில் முகில் வந்து−
மனமுவந்து ஆடுதடி;
இலை நுனியில் காற்று வந்து−
இதமாக ஆடுதடி;

நிலையில்லாமல், என் மனசும், யார்−
நினைவிலோ, ஆடுதடி;
விலை போன என் நெஞ்சம், அவனை−
விரைந்து என்று கூடுமடி?

காற்றில் அசையும் இலைகளையே−
தாங்கிட மரத்திற்குக் கிளையுண்டு;
காதலில் அசையும் என் இதயத்தையே−
தாங்கிடும் கரமிங்கு எங்குண்டு?

கயிற்றில் இருகரம், பிணைந்திருக்கு;
காதலில் உள்ளமோ பிணைந்திருக்கு;
கன்னியின் மனசோ அங்கிருக்கு; வெறும்−
கூடு ஒன்று, மட்டுமே இங்கிருக்கு!

ஆடி ஆடிப் பார்த்தாலும்,
அடி ஒன்றேனும் அருகிடுமா?
கூடி அவனைச் சேரும் நாள்
குறுகியே கடிதில் வந்திடுமா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s