(கோபிகா மனோஹரம்..)

கோபி 1:−

பார்ப்பவர் எல்லாம் பேசிடுவார்;
பாவையை பழித்தே ஏசிடுவார்;
யாருக்கும் உன் செயல் தெரியாது−
என் சேலையோ உனக்கென்றும் உதவாது!

போர் எல்லாம் என்னிடம் தொடுக்காதே;
பொல்லா குணமிது(வு)ம், அடுக்காதே!
நீருக்குள் நெடுநேரம் நிற்கின்றேன்; அந்த
நீல ஆடை தா, உடுக்கின்றேன்!

கோபி − 2:−

அன்று நான் கொணர்ந்த தின்பண்டம்−
ஆனந்தம், அமிர்தம் என்றாயே!
இன்றும் அன்னை, அது செய்கின்றாள்−
இரண்டு மடங்காய் தருகின்றேன்!

நம்மவள் அல்லவா இவள் என்று−
நந்தகுமாரா, இரங்கிடுவாய்!
சும்மா சீண்டியே பாராதே−
சேலையை எனக்கே அருளிடுவாய்!

கோபி 3 & 4:−

எங்கள் காவலன் நீயென்று, யாம்−
எல்லாரிடமும் சொல்கின்றோம்;
பங்கம் அதற்கொன்று வரலாமா?
பரந்தாமன் செய்வதும் சரிதானா?

விளையாட்டு எல்லாம் போதுமடா;
வெகு நேரம் இங்கே ஆச்சுதடா;
வேடிக்கை நேரமிது இல்லையடா;
வாட்டுது குளிரும், ஆடை வழங்கிடடா!

கோபி 5:-

எத்தனை நேரம் ஆனால், என்?
என் ஆடையை மறைத்து நீ வைத்தால், என்?
சித்தம் கலங்கி உன் சிந்தையிலே−
மத்தது எதிலும் மனம் செல்லலையே!

ஒத்தை உடுப்பும் இருந்தால், என்?
உதவாமலே அது, போனால் என்?
தத்தை காதலில் தவிக்கின்றேன்; நீ
தாராத துகிலுக்கா துடிக்கின்றேன்?

கோபி 6:−

தோகை என் மீது உனக்கு மையலடா;
தானாய், எனைத் தேடி வருவாயடா;
வாகாய் ஆடையை எனக்குடுத்தி, நம்−
வாடிக்கை அதையும், நீ தருவாயடா!

எல்லாம் அறிந்தே இருக்கின்றேன்;
ஏன் உனை இறைஞ்சவும் போகின்றேன்?
எல்லோரும் இவ்விடம் நீங்கிய பின்−இந்த
விள்ளாத மலருக்கு, நீ விரைவாயே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s