(சேற்றிலிறங்கி சாதிப்பாயா?…)

மண்டுக முனிவன் சாபம் நீக்கவே,
ஆண்டுகள் தோறும், ஆற்றினில் இறங்கி− வேண்டுவோர் குறைகளும் தீர்த்தே கொண்டு,
நீண்டொரு பயணமே செய்கின்றாயே!

ஆரவாரம் பலப்பலவோடே−
அடியவர் உன்னைச் சூழ வந்தாரே!
ஓரடி வீசி நீ நடந்தே செல்ல−
யாருன்னை விடுவார், எம்பெருமானே!

பரிமேல் ஏறியே பவனியும் வருவாய்;
வரிசங்கம் ஊதவே, ஊர்வலம் செல்வாய்!
எரியும் தீபக்கோலது ஒளியில், நீ
பரிவதும் தெரியுதே, புள்ளூர்வானே!

அடியவர்க்காக, ஆற்றில் இறங்கும் நீ−
விடிவைத் தருவாயோ, எனக்கும் இன்று?
செடியாம் வினையெனும் சேற்றிலே அழுந்தினேன்;
கடிதே மீட்கவே, தரும் கரம் என்று?…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s