(தன்வந்திரி கவசம்..)

(இது அடியேனது ஒரு சிறிய முயற்சியே.. அகமும், புறமும் வ்யாபித்துள்ள சீர்கேடுகளை செவ்வன செய்ய வேண்டி ஒரு யதாசக்தி ப்ரார்த்தனை..
இவ்விடம் காண்கின்ற அடியேனது பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.)

காக்க, காக்க, கருணையால் காக்க;
காக்க, காக்க, கனிவுடன் காக்க;
காக்க, காக்க, கலிகளும் நீங்கவே;
காக்க காக்க பொலிவுகள் ஓங்கவே!

உச்சியில் நரம்பொடு மண்டை ஓடும்,
கற்றைக் குழலோடு காணும் சிரமும்,
நெற்றியும், புருவமும், நயனங்கள் இரண்டும்,
நாசியும், செவிகளும், சிவந்த அந்நாக்கும்,
சூழ்ந்திரு பற்களும், சேர்ந்தொரு வாயும்,
கன்னங்கள் இரண்டொடு தாடை ஒன்றும்

தாங்கிப் பிடிப்பாய், தயையுடன் நீயே;
தன்வந்திரியாய், தோன்றிய தாயே!

வதனம் கீழே இறங்கிடும் கழுத்தும்,
அகன்ற மார்பொடு ஆதார முதுகும்,
நீண்ட புஜங்களும், கரங்கள் இரண்டும்,
ஈரைந்து விரல்களும், இயைந்த நகங்களும்,

தாங்கிப் பிடிப்பாய், தயையுடன் நீயே;
தன்வந்திரியாய், தோன்றிய தாயே!

எண்சாண் உடலையும், பேணிடும் உதரமும்,
அதனை அணைத்திடும் இருபுற இடைகளும்,
இடையில் ஒளிந்த குறியது ஒன்றும்,
பின்னே விளங்கிடும் ப்ருட்ட பாகமும்,
இரு முழங்கால்களும், பாதங்கள் இரண்டும்,
பத்து விரல்களும், அவைகளின் நகங்களும்

தாங்கிப் பிடிப்பாய், தயையுடன் நீயே;
தன்வந்திரியாய், தோன்றிய தாயே!

புறத்தேயுள்ள அங்கங்களோடே,
உள்உறை பாகங்கள் மொத்தமாய் யாவையும்,
ஓடும் குருதியும், எலும்பும், நரம்பும்,
நிணநீரோடே, மஜ்ஜையும், திசுக்களும்,
நவிலாதொழிந்த பாகங்களோடே,
நாளும் பொழுதும், நலம் யாம் காண−

தாங்கிப் பிடிப்பாய், தயையுடன் நீயே;
தன்வந்திரியாய், தோன்றிய தாயே!

கரமே ஏந்திய அமுதமும் கொண்டு,
தரமாய் தேகமும், மாற்றுவாய் நின்று!
மரம் போல் உறுதியாய் மேனியை ஆக்கி,
வரமாய் உள்ளே நீ வந்தமர்வாயே!

சிந்தையினின்று நீ சிந்தி விடாமல்,
எந்த நேரமும், எம்மில் உறையவும்−
குந்தகம் செய்யும் பிணியாம் குணங்கள்,
வந்தெம்மில் நுழையா வண்ணமதாகவும்−
நிந்தைக்காட்படா நெறியுடன் யாமும்,
நின் அன்புக்கென்றும், அருகதையாகவும்−

தாங்கிப் பிடிப்பாய், தயையுடன் நீயே;
தன்வந்திரியாய், தோன்றிய தாயே!

காக்க, காக்க, கருணையால் காக்க;
காக்க, காக்க, கனிவுடன் காக்க;
காக்க, காக்க, கலிகளும் நீங்கவே;
காக்க, காக்க, பொலிவுகள் ஓங்கவே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s