(தம்பத்தாய்க்கொரு, சிம்மக்குழந்தை…)

பத்து மாதம் சுமக்கவில்லை,
பத்தியமும் ஏதுமில்லை;
நித்திரையில் பங்கமில்லை;
நீள் மூச்சு வாங்கவில்லை!

பூச்சூடிப் பார்க்கவில்லை;
புது வளையல் அடுக்கவில்லை;
பத்திரிகை அடித்தழைத்து−
பின், சீமந்தமும் செய்யவில்லை!

ஒரு துடிதுடித்து வலி இல்லை;
மருத்துவச்சி யாருமில்லை;
பெரும் ஓசை பூமியதிர−
பேருருவோ பிறந்ததங்கே!

அம்புயத்தான் ஆவிர்பவிக்க−
தம்பம் அதுவோ தாயாச்சு;
சிம்மக் குழந்தை சேயாக−
நம்ம கலியும் கரைஞ்சாச்சே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s