(தயிர் வேணுமா, தயிர்?..)

பத்து விரல் பட்ட தயிறு−
பானையிலே மிச்சம் இருக்கு;
இத்த போல ஒரு சுவைக்கே−
ஈடு இங்கே ஏதிருக்கு?

உதடு மேல பட்ட தயிரு−
உள்ள கொஞ்சம் சிந்தி இருக்கு;
அதனாலே தான் அதுவும்−
அமிர்தம் போல ருசியா இருக்கு!

ஆசையோட அவன் குழலும்−
அந்த தயிரை உண்டிருக்கு!
மோசம் போக வேணாம் நாமே−நம்ம
மனசும் ஏங்கி கிடக்கு!

மசமசன்னு நிக்காம−
மடமடன்னு ஓடி வாங்கோ;
மளமளன்னு காலியானா−
மறுபடியும் இது வருமா?

கண்ணன் கிட்ட பங்கு கேட்டு−
கொஞ்சம், நாமும் சாப்பிடலாம்;
என்னோட கூட வந்தா−
எல்லாருமா சாதிக்கலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s