(“தேனூறுதே தேவனே”…..)

இசைத்தேனை நீ பொழிய,
குளித்தேனே குதுகலமாய்;
மலைத்தேனே மதுரத்திலே−
“மலைத்தேனே!” இது!− ஐயமில்லை!

அசைந்தேனே, அடிஅடியாய்;
மிதந்தேனே மோகத்திலே;
துடித்தேனே தாபத்திலே−
விழுந்தேனே விரகத்திலே!

நினைத்தேனே, உனை நானே;
அணைத்தேனே, அகத்தாலே;
இனித்தேனே இவ்வுறவாலே;
இனி, “தேனே” இது தானே?

சுவைத்தேனே, தொடர்ந்திடுமா?
சுகித்தேனே, நிலைத்திடுமா?
களித்தேனே, அது நிரந்தரமா?
பதைத்தேனே, சொல் பரந்தாமா!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s