(தோற்பது நீயா, இல்லை நானா?..)

உயிர் ஊடுருவும்−
உன் பார்வையில், நான்−
உறைந்து விடுகிறேனடா;

செயல் மறந்து, சொல் மறந்து..
இது என்ன தாக்குதல்?..
வாக்குவாதம் கூட செய்யாமல்,
நான் வீழ்ந்து விடுகிறேனடா!

சம வலிமை பொருந்திய,
ஆயுதம் ஏந்தியவரொடு அல்லவா,
நீ போர் புரிய வேண்டும்?

எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு−
என்னை நிராயுதபாணியாக்கி,
நீ தொடுக்கின்ற இந்த போரில்,
வெற்றி நிச்சயம்−
உன் பங்கில்தான் என,
தெரியாதா என்ன?

போகட்டும் போ..
நானே தோற்றுப் போகிறேன்..
தோற்கடித்த நீயே,
தேடிவந்து−
என்னைத் தேற்றுவாய்−
என்ற நம்பிக்கையில்!

நீ வந்த பின்னே−
வெற்றி யாருடையது என
முடிவு செய்வோம்!..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s