(நமக்காகவே, நாம் நமக்காகவே..)

எந்த பஞ்சு மெத்தையும்
தராத சுகமிது−உன்
நெஞ்சு மெத்தையில் நானிருப்பதை
உணரும் நேரமிது!

குளிர் சாதனம் அவசியமில்லை;
சுழல் விசிறிக்குத் தேவையில்லை;
மயிலிறகாய் உன் ஐவிரல் வருட−அந்த
மயக்கத்திலே நான் உறங்கிடுவேன்!

நீ எனக்காய், நானுக்காய்…
நிம்மதியாய் நிமிடங்கள்;
தீக்குள்ளே பொசுங்காதோ,
நமக்குள் வந்து போன நெருடல்கள்?

இப்படியே தொடர்ந்திடுமோ,
நம்மை உணரும் தருணங்கள்?
அப்படியே கடந்திடுமோ,
அன்பை ஏந்தி நம் காலங்கள்?..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s