(நிலவுக்கு என்மேல், என்னடி கோபம்?..)

மலர் முகத்தைத் திருப்புகின்றாய்,
ஏனடி பெண்ணே? இந்த−
மாதவனும் செய்த தவறு−
என்னடி கண்ணே?

சிலர் சொல்லும் வார்த்தைகளை,
நீ நம்புகிறாயே; இந்த−
சிரீதரனை எதிரியென்றே,
நடத்துகிறாயே!

ஓடி வந்த எந்தன் உள்ளம்−
உணரவில்லையே; உனக்கு−
வாடி நிற்கும் எந்தன் நெஞ்சும்− விளங்கவில்லையே!

தேடித்தேடி வருவதனால்,
நான் தோற்றுப் போனேனா?
நாடி வரும் காரணத்தால்,
நான் இளப்பம் ஆனேனா?

விண்மீண்கள் வானில் உண்டு;
வெளிச்சம் ஏதடி? அந்த−
வெண்மதியே ஒளி அளிக்கும்;
விளக்கம் எதுக்கடி?

என்னைச் சுற்றி ஆயிரம் பேர்−
ஆயின், என்னடி?
என் மனது சுற்றுவதோ,
உன் ஒருத்தியையேயடி!

ஏறெடுத்து, என்னைப் பாரேன்−
என் மனம் புரியும்; அந்த
கூர் விழியால் தாக்காதே, உன்−
நிம்மதி சரியும்!

ஊர் சொல்லில் உண்மையில்லை−
உனக்குமே தெரியும்; இந்த−
தீர்த்தன் உனக்கே தோற்றவன்தான்,
உலகமே அறியும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s