(நீங்க பாதி…நான் பாதி…)

உஷ்…. சத்தம் போடாம வந்தாக்க−
இஷ்டப்படி நாம சாப்பிடலாம்;
உஷ்ணம் ரொம்ப அதிகமாயிருக்கு;
உருகும் முன்னாடி சாப்பிடலாம்!

பதுங்கிப் பதுங்கி, பாத்து வாங்கோ;
பூனை போல நடந்து வாங்கோ;
எதுக்கும், எல்லாரும் தனியா வாங்கோ;
யார் கண்ணுலயும் படாம வாங்கோ!

யசோதை அம்மா இப்பத்தான்−
அசதியா இருக்குனு, தூங்கப் போனா;
வசதி இது தான் நமக்கும் இப்போ−
வேலை எல்லாம் அப்பறம் பார்ங்கோ!

கரண்டி வெண்ணைக்கு மேல யாரும்−
கொஞ்சமும் கேக்கக் கூடாது;
அரண்டே போயிடும் அடிவயிறு−
அதிகம் வெண்ணை உதவாது!

மந்தம், பித்தம் வந்தாக்க−
தொந்தரவாயிடும் பின்னால;
நந்தன் மகனை குத்தம் சொன்னா−
எந்த நன்மையும் விளையாது!

அளவா நானே உருட்டித் தாரேன்−
அதுல குத்தம் வாராது;
அதிகமா இருந்தா நானே தின்பேன்−
அது என்ன ஒன்னும் பண்ணாது!…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s