(நீ, நீயாய் இரு..)

அலர்மகள் எங்கே?
அமரரும் எங்கே?
அடியரைக் காத்திடும்−
ஆழியும் எங்கே?

நிலமகள், மண்மகள்−
சென்றதும் எங்கே?
நீ மட்டும் தனியனாய்−
அமர்ந்ததேன் இங்கே?

திருவாபரணங்கள்,
பலவும் எங்கே? உன்−
திவ்யாயுதங்கள்,
சிலவும் எங்கே?

நறுமணம் கமழும்−
தூபமும் எங்கே?
ஒரு மனம் கொண்டு−
துதிப்பவர் எங்கே?

புடை சூழ பார்த்தே−
பழகிய எம் உள்ளம்,
பலதும் வினவுதே−
உன் விடையுமே எங்கே?

தனிமையும், எளிமையும்−
உனக்கு ஏர்வையாயில்லை;
இனிமையும் இதங்களும்−
உன்னில் காணட்டும் எல்லை!

தேவியர் மூவரும் சூழ்ந்தே இருக்க−
தமியர் கூட்டம், நீ அலையாய் ஈர்க்க,
ஆவியும் குளிர, அலங்காரம் ஏற்று−
ஆனந்தம் பொழிந்தே, எமை அணைப்பாயே!..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s