(போதி சேயே… போதித்தாயே…)

ஆசைகள் அறுமின் என்றே சொன்னாய்;
ஆசையால் துன்பமே, அவனியில் என்றாய்!
பூசையால் விலகா துயரமும் உனக்கு−
ஆசைகள் விலக்க, அகலும் என்றாய்!

உயரிய உண்மைகள் நான்கெனக் காட்டி,
பழகுங்கள் நீவிர் பாங்குடன் என்றாய்;
மயர்வுகள் நீக்கி, மனமதைத் துலக்க−
மங்கலம், தானே வருமெனச் சொன்னாய்!

எண்வகை வழிகளும், நன்மைகள் பெறவே;−
நன்றே உணர்ந்திட, உண்மை நீர் அறிவீர்;
மனிதம் மதித்தே, புனிதம் ஆவீர்;
இனிதாம் தெய்வமும், இதுவே என்றாய்!

தூமனம் கொண்டு, பூ மணம் பரப்பி−
ஓர் மனமாய் என்றும், வாழ்ந்திடு என்றாய்!
ஆழ்மனத்திலும் நீ மாசுகள் அகற்ற−
ஊழ்வினை, உன் வழி, ஏதோ என்றாய்!

ஒன்றே உடலின் குருதியின் நிறமே,
ஒன்றே மந்திரம், அன்புதான் பரமே;
இன்றும் பொருந்திட, அன்றே சொன்னாய்; நீ
நன்றாய் நவின்றதை, என்று யாம் பழகுவோம்?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s