(மலரினால் உண்டோ மலர்ச்சி?…)

தலை மேல மலர்ச்சி இருக்கு;
தவிப்பும், அயர்ச்சியும், கீழ இருக்கு;
நிலையில்லா வருமானமா−
நெத்திக் கோட்டை வரஞ்சிருக்கு?

பறிக்கும் பூவும் தடுத்திவளின்−
எரிக்கும் ஏழ்மை விரட்டிடுமா?
தெரியாப் புதிரா வழி இருக்கே!
சரியா பாதையும் புலர்ந்திடுமா?

கூடைக் கனவுகள் மனத்துள்ளே−
கொள்ளையே போகுது, கணத்துள்ளே!
ஆடையைப் போட்டு, ஆசைகள் மறைக்க−
ஆயுசும் கரையுதே, அதற்குள்ளே!

வாடிப் போகும் முன்னம், இதை−
வாடிக்கையாளரிடம் தந்திடணும்;
வாடாமல், பிள்ளைகள் வயிறிருக்க−
வாடிக்கை வழிதானே நடந்திடணும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s